இளையராஜா எழுதி இசையமைத்து..

இளையராஜா எழுதி இசையமைத்து..

‘மாயோனே மணிவண்ணா…’ எனத் தொடங்கும் பாடலில் இளையராஜாவின் இனிய மெட்டும், பக்தி உணர்வு ததும்பும் சொற்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து செவிக்கு இனிய அமுது படைத்திருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டிருக்கிறார்கள். இசை ரசிகர்கள், இசை ஆர்வலர்கள், இசை விமர்சகர்கள், பாமரர்கள், இணைய தலைமுறையினர், இளைய தலைமுறையினர் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று ‘மாயோனே மணிவண்ணா…’ என்ற பாடல் இணையத்தில் புதிய சாதனையை படைத்து வருகிறது.

மாயோன் படம்

மாயோன் படம்

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் ‘மாயோன்’ படத்தை அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கியிருக்கிறார். இதில் சிபிராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

ரஞ்சனி, காயத்ரியின் குரலில்

ரஞ்சனி, காயத்ரியின் குரலில்

சிம்பொனி இசைத்த இசை மேதை இளையராஜாவின் மயக்கும் மெட்டில் உருவாகி, காலை நேர பூபாளத் தென்றலாக ‘மாயோனே மணிவண்ணா…’ என்ற பாடல், இனி தமிழகத்தின் அனைத்து இல்லங்களிலும் ஒலிக்கும். வரவிருக்கும் மார்கழி மாதங்களில் அதிகாலையில் ஒவ்வொரு இல்லங்களிலும் ஒலிக்கும் பக்தி பாடலின் பட்டியலில் ரஞ்சனி, காயத்ரியின் இனிய குரலில் ஒலிக்கும் ‘மாயோன்’ பட பாடலும் இணையும் என்பது உறுதி.

Ilayaraja To AR Rahman Songs | Sarangi Player Manonmani | சாரங்கி இசைக்கலைஞர் மனோன்மணி

பெரிய வரவேற்பு

பெரிய வரவேற்பு

இதனிடையே ரசிகர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மற்றும் கீதா ஜெயந்தி தின வாழ்த்துகளையும் தெரிவிக்கும், ‘மாயோன்’ படக்குழுவினர், இசை ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் இளையராஜாவின் இந்தப் பாடலை தெலுங்கிலும் வெளியிட்டிருக்கிறார்கள் . தெலுங்கில் இந்தப் பாடலை பாடலாசிரியர் பாஸ்கரபாட்லா எழுத, பின்னணி பாடகிகளான சைந்தவி மற்றும் வினயா கார்த்திக் ராஜன் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். அங்கும் இந்தப் பாடலுக்கு பெரிய வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது


Source link