கிருஷ்ணர் ராதையின் காதல்

கிருஷ்ணர் ராதையின் காதல்

மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே என்ற பாடல் 1966 ஆம் ஆண்டு வெளியான கோஹினூர் திரைப்படத்திற்காக முகமது ரஃபியால் பாடப்பட்டது. கிருஷ்ணர் ராதையின் காதலை பேசும் இப்பாடல் மிகவும் பிரபலமானது

ஆபாச நடனம்

ஆபாச நடனம்

‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’பாடல் தற்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகை சன்னி லியோன் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். இந்த வீடியோவை சரிகம நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. இப்பாடல் வெளியாகி 4 நாட்களில் யூடியூபில் 98 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, சன்னி லியோன் மற்றும் பாடகர்கள் ஷரீப் மற்றும் தோஷி 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மதுபன் மே ராதிகா, ஜைசே ஜங்கிள் மீ நாச்சே மோர் என்ற இசை வீடியோவை மூன்று நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

கண்டனத்திற்குரியது

கண்டனத்திற்குரியது

சில விஷமிகள் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்துகின்றனர். மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ வீடியோ கண்டனத்திற்குரிய ஒரு முயற்சியாகும். சன்னி லியோன் ஜி, ஷரீப் மற்றும் தோஷி ஜி ஆகியோரை நான் எச்சரிக்கிறேன். மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்டு பாடலை நீக்கவில்லை என்றால். பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார்.


Source link