சர்ச்சை கேள்வி

சர்ச்சை கேள்வி

மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியான அகாடமிக் ஹைட்ஸ் பப்ளிக் ஸ்கூலில், பாலிவுட் ஜோடியான கரீனா கபூர் மற்றும் சைஃப் அலி கான் மகனின் முழுப் பெயரை எழுதுமாறு, 6ஆம் வகுப்பு மாணவனுக்கான வினாத்தாளில் கேள்வியாக கேட்கப்பட்டு இருந்தது.

கடுப்பான பொற்றோர்

கடுப்பான பொற்றோர்

இந்த கேள்வித்தாளை பார்த்த பெற்றோர் கடுப்பாகி பள்ளி மாணவர்களை கேட்கும் கேள்வியா இது என கேட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் புகாரின்படி சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.

மாணவர்களின் அறிவை வளர்க்கும்

மாணவர்களின் அறிவை வளர்க்கும்

அதுகுறித்து பள்ளிநிர்வாக இயக்குநர் ஸ்வேதா ஜெயின் கூறுகையில் ” மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கவே இதுபோன்ற கேள்வி கேட்கப்படுகிறது. கேள்வித்தாளை டெல்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு தயார் செய்துஅளித்தது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் இந்த கேள்வித்தாளை எதிர்க்கவில்லை. இது மாணவர்களின் அறிவை வளர்க்கும் விதத்தில்தான் கேட்கப்பட்டிருந்தது என பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பல கேள்விகள்

பல கேள்விகள்

முன்னதாக அந்த கேள்வித்தாளில் மேலும் 4 கேள்விகள் இடம் பெற்று இருந்தன. இதில், இந்தியாவில் செஸ் விளையாட்டில் முதல் கிராண்ட் மாஸ்டர் யார் என்ற கேள்வியும், வான் வழி தாக்குதலின் போது பாகிஸ்தானில் விழுந்தது எந்த இந்திய விமான படை விமானியின் விமானம் என்றும், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் எந்த அணி வென்றது, வடகொரியாவின் அதிபர் யார் என்ற கேள்வியும் இடம் பெற்று இருந்தன.

இணையத்தில் வைரல்

இணையத்தில் வைரல்

இதனிடையே மேற்குறிப்பிட்ட 6 ஆம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது . இதனைப் பார்த்தவர்கள் இணையத்தில் கடும் கண்டனத்தை பகிர்ந்து வருகின்றனர்.


Source link