சுஷ்மிதா சென்

சுஷ்மிதா சென்

முன்னாள் உலக அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ஆனால் இரண்டு பெண் குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதாசென் கடந்த 2018ம் ஆண்டிலிருந்து ரோஹ்மன் என்பவரைக் காதலித்து வந்தார்.

பிரிந்தனர்

பிரிந்தனர்

இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியாகின. இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, நீண்ட நாள் உறவு முடிந்துவிட்டது என்றும், நண்பர்களாக தொடங்கினோம், நண்பர்களாகவே இருப்போம் எனஅறிவித்து இருந்தார்.

காதலை மதிக்கிறேன்

காதலை மதிக்கிறேன்

இந்நிலையில், சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அதில், பேசிய சுஷ்மிதா, காதலை ஏன் மதிக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார். அப்போது ​​​​ஒரு ரசிகர், மரியாதை என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சுஷ்மிதா, மரியாதை என்பதைத்தான் நான் எல்லாமுமாக பார்க்கிறேன். ஏனென்றால் காதலை நீங்கள் மிகுந்த தீவிரத்துடன் உணர்கிறீர்கள், அதே தீவிரத்துடன் நீங்கள் வெளியேறுவீர்கள்.

மரியாதை காதலுக்கு முக்கியம்

மரியாதை காதலுக்கு முக்கியம்

சினிமாவும், ஊடகங்களும், புத்தகங்களும் உங்களை நம்பத்தகாத காதலைத்தான் காட்டுகிறது. அந்த காதலில் பொறுப்புகளும் இல்லை, சிக்கல்களும் இல்லை. ஆனால் மரியாதை இல்லாத இடத்தில், காதலுக்கு அர்த்தமில்லை. காதல் வந்து போகும், ஆனால் மரியாதை இருந்தால் மட்டுமே காதலை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். காதலில் மட்டும் கவனம் செலுத்தினால் அது தற்காலிகமானதாக இருக்கும். மரியாதை இல்லை என்றால், காதலும் அங்கு இருக்காது என்று காதல் குறித்தும் மரியாதை குறித்து அந்த நேரலையில் சுஷ்மிதா அழகாக பேசினார்.


Source link