பாம்பு கடித்தது

பாம்பு கடித்தது

இந்நிலையில் நடிகர் சல்மான் கான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவர் பன்வெல்லில் உள்ள பண்ணை வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றிருந்தார். அப்போது பண்ணை வீட்டுக்குள் நுழைந்த விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது.

விஷ முறிவு மருந்தளித்து சிகிச்சை

விஷ முறிவு மருந்தளித்து சிகிச்சை

இதையடுத்து அவர் கமோதில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். சல்மான் கானை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு விஷத்தை முறிக்கும் மருந்து கொடுத்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு நடிகர் சல்மான் கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பாலிவுட்டில் பெரும் பரபரப்பு

பாலிவுட்டில் பெரும் பரபரப்பு

சல்மான் கானை பாம்பு கடித்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறந்த நாளுக்கு முந்தைய நாள் சல்மான் கானை பாம்பு கடித்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னை பாம்பு கடித்தது குறித்து நடிகர் சல்மான் கான் மனம் திறந்து பேசியுள்ளார்.

3 முறை கடித்தது..

3 முறை கடித்தது..

அவர் கூறியிருப்பதாவது, ஒரு பாம்பு என் பண்ணை வீட்டில் நுழைந்தது, நான் அதை ஒரு குச்சியைப் பயன்படுத்தி வெளியே எடுத்தேன். அது என்னை மூன்று முறை கடித்தது. அது ஒரு வகையான விஷப்பாம்பு. 6 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தேன்; இப்போது நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் பிறந்தநாள்

சல்மான் கான் பிறந்தநாள்

சல்மான் கான் பாம்பு கடியின் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்து வந்ததை கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே இன்று பிறந்தநாளை கொண்டாடி வரும் சல்மான் கானுக்கு ரசிகர்களும் பாலிவுட் சினிமா நட்சத்திரங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Source link