வில்லன் நடிகர்

வில்லன் நடிகர்

கேப்டன் விஜயகாந்தின் கள்ளழகர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சோனு சூட். விஜய்யின் நெஞ்சினிலே, பிரசாந்தின் மஜ்னு, அஜித்தின் ராஜா, சிம்புவின் ஒஸ்தி, அனுஷ்காவின் அருந்ததி என ஏகப்பட்ட படங்களில் வில்லன் நடிகராக நடித்து அசத்தியவர். டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களிலும் வில்லனாக மிரட்டி வருகிறார்.

சூப்பர்மேன் சோனு சூட்

சூப்பர்மேன் சோனு சூட்

கொரோனா காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கஷ்டப்பட்டு வந்ததை பார்த்து சொகுசு வாழ்வை விட்டு மக்களுக்காக முன்களப் பணியாளராக மாறினார் நடிகர் சோனு சூட். நூற்றுக்கணக்கான பேருந்துகளை ஏற்பாடு செய்து மக்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். கொரோனா காலத்தில் இந்தியன் சூப்பர்மேனாக மாறினார் சோனு சூட்.

அறக்கட்டளை ஆரம்பம்

அறக்கட்டளை ஆரம்பம்

சோனு சூட் ஆரம்பத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டு கையில் உள்ள காசை போட்டு பேருந்துகளை ஏற்படுத்தி உதவிகளை செய்ய ஆரம்பித்தார். அதன் பின்னர் சோனு சூட் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து அதன் மூலம் கிடைக்கும் நிதிகள் மூலமாக தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக உதவி தேவைப்படுவோர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

மாணவருக்கு ஸ்மார்ட்போன்

மாணவருக்கு ஸ்மார்ட்போன்

மாடு கூட இல்லாமல் தனது இரு பெண்களையே மாடுகளாக்கி ஏர் உழுத விவசாயியை பார்த்து அதிர்ந்து போன சோனு சூட் அந்த குடும்பத்துக்கு டிராக்டர் ஒன்றை பரிசாக அளித்தார். மேலும், ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் செல்போன்களை வழங்கி வருகிறார். தற்போது ஒரு மாணவருக்கு சோனு சூட் புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இன்றைய நம்பிக்கை

இன்றைய நம்பிக்கை

சோனு சூட் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல இன்றைய மக்களின் நம்பிக்கையாக மாறி உள்ளார். என் படிப்புக்காக ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சார்.. உங்களை பார்த்து பெருமைப்படுகிறேன். உங்களின் அற்புதமான சேவை தொடரட்டும் என அந்த மாணவர் ஸ்மார்ட் போன் புகைப்படத்தை ஷேர் செய்து நன்றி கூறியுள்ளார்.

சோனு சூட் அட்வைஸ்

சோனு சூட் அட்வைஸ்

நல்லா கஷ்டப்பட்டு படிங்க.. ஏதாவது ஒரு விஷயத்தில் சாதித்தால் பிறருக்கு உங்களால் முடிந்த உதவியை மறக்காமல் செய்யுங்க என நன்றி தெரிவித்த மாணவருக்கு நடிகர் சோனு சூட் சூப்பர் அட்வைஸ் கொடுத்துள்ளார். சோனு சூட் ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்த ட்வீட்டை பார்த்த பல நெட்டிசன்களும் தங்களுக்கும் ஸ்மார்ட் போன் வேண்டும், லேப்டாப் வேண்டும், படிப்புக்கு ஃபீஸ் கட்டுங்க என பல கோரிக்கைகளை குவித்து வருகின்றனர்.


Source link