அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகாமல் தள்ளி போனது.  இதன் காரணமாக தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது.  S.R.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படம் “கொம்பு வச்ச சிங்கம்டா”.  இந்த திரைப்படத்தில் மடோனா  செபாஸ்டியன். சூரி, இயக்குனர் மகேந்திரன்,  தயாரிப்பாளர் இந்தர்குமார், ஹரீஷ் ஃபெராடி, துளசி, தீபா ராமனுஜம், சென்ட்ராயன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இது 1990 – 1994  கால கட்டங்களில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும்.  இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டது.   இந்த திரைப்படத்தை ரெதான் இந்தர்குமார் தயாரித்துள்ளார்.  மேலும் படத்தின் படப்பிடிப்பு  பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்படம் பொங்கலன்று ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

ALSO READ | Valimai ரிலீஸ் ஒத்திவைப்பு..!

அடுத்ததாக கிஷோர்குமார் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “நாய் சேகர்”.  இப்படத்தில் கதாநாயகியாக ‘குக் வித் கோமாளி’ பவித்ரா லட்சுமி நடிக்கிறார், மேலும் மி ஜார்ஜ் மரியான், கணேஷ், லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  ஒரு நாயுடன் தனது ஆன்மாவை மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  இப்படத்தை வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

naaisekar

மேலும் ஏ.ஹரிஹரன் இயக்கத்தில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான அஸ்வின் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் “என்ன சொல்ல போகிறாய்”.  இப்படத்தில் தேஜு அஷ்வினி, அவந்திகா மிஸ்ரா, புகழ், டெல்லி கணேஷ், சுப்பு மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.  சில ஆல்பம் சாங் மற்றும் சில படங்களில் துணை நடிகராக அஸ்வின் குமார் இந்த படத்தின் மூலம் கதாநாயகராக களமிறங்கியுள்ளார்.  இந்த திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

carbon

ஆர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விதார்த் நடிப்பில் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படம் “கார்பன்”.  இப்படத்தில் தன்யா, மாரிமுத்து, மூனார் ரமேஷ், வினோத் சாகர், அஜய் நட்ராஜ், விக்ரம் ஜெகதீஷ், பவுலின், மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.  திரில்லர் கதையம்சம் நிறைந்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாக உள்ளது.  இந்த படங்களின் வரிசையில் வி.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள “வீரமே வாகை சூடும்” படமும் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.  அஜித்தின் ‘வலிமை’ படத்துடன் விஷாலின் “வீரமே வாகை சூடும்” படம் மோதப்போகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிபோய் இருக்கிறது.  இந்நிலையில் மேற்கண்ட இந்த 5 படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது.

ALSO READ | இந்த வாரம் OTT-ல் வெளியாகும் புதிய திரைப்படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR
Source link