தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி பலவருட போராட்டங்களுக்கு பிறகு இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனை கொண்டாடாத ரசிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவை பெற்றுள்ள அவரது படங்கள் அனைத்தும், பாக்ஸ் ஆபிஸ் வெற்றிக்கு குறைந்தபட்ச உத்தரவாதத்தை அளிக்கின்றன.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை ஆர்த்தியை திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் டாஸ் என்கிற மகனும் உள்ளனர். 

ALSO READ | மிரட்டலாக வெளியாகியுள்ள ‘யானை’ படத்தின் டீசர்!

டாக்டர் (Doctor) திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது அயலான் மற்றும் டான் உள்ளிட்ட திரை படங்கள் கைவசம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் தனது அடுத்த திரைப்படத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் இணைய உள்ளதாக சில செய்திகள் கசிந்துள்ளது.

இந்த நிலையில் தமிழர் திருநாளாம் பொங்கல் (Pongal 2022) பண்டிகையை வெகுசிறப்பாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய  புகைப்படங்களையும் பதிவிட்டு உள்ளார். இந்த  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

ALSO READ | இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி சேரும் ரஜினிகாந்த் !

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR
Source link