சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த சிம்புவிற்கு மீண்டும் கம்பேக் கொடுக்கும் விதமாகவும், வெற்றி படமாகவும் ‘மாநாடு’ படம் அமைந்தது. இப்படத்தின் வெற்றி சிம்புவை மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது.  தற்போது நடிகர் சிம்பு, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களை தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’ (vendhu thaninthathu kaadu) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ | இந்த வாரம் OTT-ல் வெளியாகும் புதிய திரைப்படங்கள்!

இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.  இப்படத்தில் கயாடு லோஹர், ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் கடந்த டிசம்பர் மாதம் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை மற்றும் திருச்செந்தூர் போன்ற இடங்களில் நடத்தப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஓரளவு முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு ரிலீசாகி சிம்பு ரசிகர்களுக்கு விருந்தளிக்க இருக்கிறது.  இப்படத்தில் பணிகள் முடிந்த பின் சிம்பு அடுத்த இரு படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.  நார்த்தன் இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள படம் ‘பத்து தல’.  வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த கையோடு   ‘பத்து தல’ படத்தில் சிம்புவிற்கான காட்சிகளை நடிக்க இருக்கிறார்.

pathuthala

மேலும் இப்படத்தின் காட்சிகளில் நடித்து முடித்த பின்னர் ‘கொரோனா குமார்’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார்.  ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இயக்குனர் கோகுல் தான் தற்போது சிம்புவை வைத்து  இந்த ‘கொரோனா குமார்’ படத்தை இயக்குகிறார்.  சமீபத்தில் இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது, இது சிம்புவின் 48வது படமாக அமைய உள்ளது.  இந்த படத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து சிம்பு நடிக்க போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ | வலிமை தள்ளிப்போனதால் பொங்கலுக்கு வெளியாகும் 5 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR
Source link