புதுடெல்லி: மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.உலகில் உருவாகும் திரைப்படங்கள் அனைத்துமே, ஆஸ்கர் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் உருவாவதில்லை என்றாலும், பெரும்பாலான பட தயாரிப்பாளர்களும், திரைத்துறையினருக்கு ஆஸ்கர் விருது கனவு, நீங்காக் கனவாகவே நீடிக்கும்.

சினிமா துறையில் திறமைவாய்ந்த நட்சத்திரங்களைத் (Film Industry) தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிக்கும் வகையில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதை அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்சஸ் (AMPAS) வழங்குகிறது.

தற்போது மீண்டும் இந்த விருது நிகழ்ச்சியின் (OSCAR Award 2022) கொண்டாட்டத்தை கோலாகலமாக கொண்டாடவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஆஸ்கார் விழாவில் பல விஷயங்கள் மீண்டும் சுவாரஸ்யமாக இருக்கும்.

ஆஸ்கர் விருதுகள் எந்தவொரு திரைப்படம் மற்றும் கலைஞருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு கலைஞரும் இந்த விருதுக்காக பல ஆண்டுகளாக கடினமாக உழைக்கிறார்கள். 

ALSO READ | யூடியூபில் 50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘ஊ சொல்றியா மாமா’ பாடல்!

மிகவும் பெருமைவாய்ந்த ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி, 2018க்கு பிறகு மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதன் ஏற்பாடுகள் மும்முரமாகியுள்ளது.  இதனால், இந்த விருதுகளுக்கான ஆர்வமும் அனைவரிடமும் அதிகரித்துள்ளது.

ஹோஸ்ட் பெயர் வெளியிடப்படவில்லை

இப்போது இந்த விருதுகளைப் பற்றி, ஏபிசி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஹுலு ஒரிஜினல்ஸின் தலைவர் கிரேக் எர்விச் (Craig Erwich), தொலைக்காட்சி விமர்சகர்கள் சங்கத்தின் குளிர்கால மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் போது இந்த தகவலை உறுதி செய்தார். இருப்பினும், இந்த முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் யார் என்றா தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. 

2019 முதல் ஹோஸ்ட் இல்லை

கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இல்லாமல், நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் வரவிருப்பதால் பார்வையாளர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

ஆஸ்கார் விருதை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்று கிரேக் எர்விச் இடம் கேட்டபோது, ​​’ஒருவேளை நான் செய்யலாம்’ என்று நகைச்சுவையாகச் சொன்னார்.

ஒருபுறம் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விருது நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டாலும், ஆஸ்கார் விருதுக்கான ஏற்பாடுகள் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கப்பட்டுள்ளதாக வால்ட் டிஸ்னி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி மார்ச் 27 அன்று நடைபெற உள்ளது.

ALSO READ | அரைமணி நேர காட்சிக்கு இத்தனை கோடி சம்பளமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
Source link