இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆவார். இவர் தமிழில் ரோஜா, இருவர் போன்ற படங்கள் தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்களில் இசையமைத்து புகழ்பெற்றவர். இவர் ஆஸ்கார் விருதுகள் போன்று பல உறிய விருதுகளை பெற்றவர்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு அமீன் என்கிற மகனும் காதீஜா (Khatija Rahman) மற்றும் ரஹிமா ஆகிய மகள்களும் உள்ளார்கள். இதில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதிஜா ரகுமானுக்கு திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனை அடுத்து தற்போது இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், ஏ.ஆர்.ரகுமானின் (AR Rahman) மகள், கதிஜா ரகுமான், தமது இன்ஸ்டாகிராமில், எல்லாம் வல்ல இறை அருளுடன்,  Riyasdeen Shaik Mohamed அவர்களுடன் நடந்த எனது நிச்சயதார்த்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அறிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில், Riyasdeen Shaik Mohamed ஒரு ஆடியோ என்ஜினியர் என்றும் பதிவிட்டுள்ளார்.

ALSO READ | Viral: பிரபுதேவாவின் ‘ஊர்வசி ஊர்வசி’ நடனத்தை அனுபவித்து ஆடும் ஏர்ஹோஸ்டஸ் வீடியோ வைரல்

 

 

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கதிஜா ரகுமானின் பிறந்த நாளான, டிசம்பர் 29-ஆம் தேதி நடந்ததாகவும் கதிஜா ரகுமான் குறிப்பிட்டுள்ளார். கொரோனா கட்டுப்பாடு காரணமாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.    

முன்னதாக 99 சாங்ஸ் என்கிற மியூசிக்கல் திரைப்படத்துக்கு கதை எழுதி, தயாரித்து இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான், தமிழ் படங்கள் ஹிந்தி படங்கள் என தொடர்ச்சியாக இசையமைது வருகிறார். சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில், கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, அத்ரங்கி ரே திரைப்படம் வெளியானது. இந்த படம் தமிழில் கல்யாண கலாட்டா என்கிற பெயரில் வெளியாது. இந்த படத்தில் தனுஷ், சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்துள்ளனர். 

அடுத்ததாக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் இயக்கத்தில் உருவாகும் இரவின் நிழல் படத்துக்கும், சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கும் ‘வெந்து தணிந்தது’ காடு திரைப்படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வேண்டுமென்றே புறக்கணிக்கப் படுகிறாரா அறிவு? உண்மையில் நடப்பது என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
Source link