புத்தாண்டையொட்டி நடிகர் அஜித்தின் ’வலிமை டிரெய்லர்’  வெளியிடப்பட்டுள்ள நிலையில், தளபதி விஜய் படத்தின் அப்டேட் கிடைக்குமா? என இளையதளபதி ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் இளைய தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட்டும் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ஆக்ஷன் திரைப்படம் “பீஸ்ட்”. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் மற்றும் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

Also Read | நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியாக கொடுத்த ’புத்தாண்டு’ சர்பிரைஸ்

கொரோனா வைரஸ் சிக்கலுக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கிய படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடைபெற்றது. ஓபனிங் சாங் மற்றும் சில சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. பின்னர், சென்னை திரும்பிய படக்குழு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. பின்னர், படப்பிடிப்பு பணிகள் மீண்டும் ஜூலை மாதத்தில் தொடங்கியது.  சில காட்சிகள் டெல்லியில் படமாக்கப்பட்ட பிறகு, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. 

RRR vs Valimai: படத்தின் நீளத்திலேயே தொடங்கிருச்சு Fight!  3 மணி நேர விருந்துக்கு தயாராகுங்கள்

அண்மையில், படத்தின் சூட்டிங் நிறைவு மற்றும் 100வது நாள் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகள் எதையும் வெளியிடவில்லை. புத்தாண்டுக்கு எப்படியும் அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் காத்திருந்தனர். குறிப்பாக, முதல் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியையே படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, இளைய தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விருந்தாக ஏப்ரல் 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இளையதளபதி ரசிகர்கள் புத்தாண்டை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு கொண்டாட உள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR




Source link