கொரோனா பெருந்தொற்றால் படங்களை குறிப்பிட்ட தேதிகளில் வெளியிட முடியாமல் திண்டாடி வருகின்றனர்.  இந்த வாரம் வெளியாக இருந்த RRR, கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய KGF போன்ற திரைப்படங்கள் சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் உள்ளன.  தற்போது வெளிவராமல் இருக்கும் அனைத்து பெரிய படங்களும் ஏப்ரல் மாதத்தை குறிவைத்துள்ளன.  எனவே,  வரும் ஏப்ரல் மாதத்தில் டாப் ஹீரோக்களின் படங்கள் அனைத்தும் வெளிவர உள்ளன.

1) பீஸ்ட்(Beast) :

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஆக்ஷன் கலந்து உருவாகியுள்ள படம் ‘பீஸ்ட்’.  சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.  இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு, ஷைன் டாம் சாக்கோ, ஜான் விஜய், ஷாஜி சென், VTV கணேஷ், அபர்ணா தாஸ், லில்லிபுட் ஃபரூக்கி, அங்கூர் அஜித் விகல், சிவா அரவிந்த், சுஜாதா பாபு போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி மற்றும் சென்னை போன்ற இடங்களில் நடத்தப்பட்டது.  அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலுக்கு பாடல் வரிகளை எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.  ‘டாக்டர்’ பட வெற்றியை தொடர்ந்து நெல்சன்-விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் அதிகபட்ச எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.  ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த திரைப்படம் சம்மர் விடுமுறையை கொண்டாடும் வகையில் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

beast

2) விக்ரம் (Vikram) :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விக்ரம்’.  ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் இந்த படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்தில்  விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் தேவதாஸ், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், ஆண்டனி வர்கீஸ், ஜாபர் சாதிக், சம்பத் ராம், ஹரீஷ் பேரடி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா, நந்தினி, மகேஸ்வரி, தர்ஷனா விஜயகுமார், ஷிவானி நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அவர் உடல்நிலை சரியானபின் மீண்டும் படப்பிடிப்பு பணி தொடங்கப்பட்டது.  ஓரளவு படத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இப்படம்  வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3) ஆர்ஆர்ஆர் (RRR) :

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், டி.வி.வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘RRR’.  இப்படத்தில் NT ராமாராவ் ஜூனியர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன் மற்றும் ஸ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.  இது இந்திய புரட்சியாளர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் புரட்சி பற்றி புனையப்பட்ட கதை.  இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, உக்ரைன், ஹைதராபாத் போன்ற பல இடங்களில் நடத்தப்பட்டது.  அதிகபட்ச பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது, பின்னர் கொரோனா தொற்று காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.  இந்நிலையில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4) கே.ஜி.எப்.2 (KGF 2) :

2018-ம் ஆண்டு வெளியான KGF படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் ‘KGF 2’.  இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ், ஈஸ்வரி ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.  ஹைதராபாத், மைசூரு மற்றும் பெங்களூரு போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட்டது.  முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  மேலும் இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து திரையிடப்பட இருக்கிறது.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி படம் வெளியிடப்படுவதாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தாமதமானது.  இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5) சர்க்காருவாரிபட்டா  (sarkaruvaaripatta) :

பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சர்க்காருவாரிபட்டா’.   இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.  மேலும் சமுத்திரக்கனி, வெண்ணெலா கிஷோர், சுப்பராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு துபாய், ஹைதராபாத், கோவா போன்ற இடங்களில் நடத்தப்பட்ட்டது.  இப்படத்திற்கு முதலில் கதாநாயகியாக நடிக்க கியாரா அத்வானி இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இறுதியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  எஸ் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  இந்த ஆண்டு ஜனவரி-13ம் தேதி இப்படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு, வரும் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | வலிமையுடன் போட்டிபோட தயாராகும் விஷால் படம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR
Source link