திரைப்படங்களை பார்க்க எந்தளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது பல சேனல்கலும், பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன. அதிலும் குறிப்பாக ‘குக் வித் கோமாளி’ (Cook With Comali) என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. ரக்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். 

ALSO READ | இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர்தானா அவுட்

இந்த நிகழ்ச்சியின் சீசன்-1 ஆனது 16 நவம்பர் 2019 அன்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக ரேகா, உமா ரியாஸ்கான், வனிதா விஜயகுமார், பிரியங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, தாடி பாலாஜி, கு. ஞானசம்பந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேசமயம் கோமாளிகளாக சிவாங்கி (Sivaangi), புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி, பப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பாகத்தில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.

இந்த நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகமும் தொடங்கப்பட்டது. இரண்டாம் பாகத்தில் சமையல் போட்டியாளர்களாக அஸ்வின் (Ashwin), பவித்ரா, கனி, தீபா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, ஷகீலா ஆகியோர் கலந்து கொண்டனர். கோமாளியாக சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, சரத், பாலா ஆகியோர் பங்கேற்றனர். இந்த சீசனில் கனி வெற்றி பெற்றார்.

அந்த நிலையில் தற்போது மூன்றாம் சீசனின் ஷூட்டிங் தொடங்கியது. இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்ச்சிக்கான முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. ஆனால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குவதில் தற்போது பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக படப்பிடிப்பை நடத்த முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி படப்பிடிப்பு தாமதமாகி வருவதால் இதன் ஒளிபரப்பு தேதியை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கும் தேதி அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
Source link