கோவை ஆலந்துறை அருகே உள்ள சித்திரைச் சாவடி அணையில் அடையாளம் ஆண் சடலம் மிதப்பதாக ஆலாந்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், சடலமாக மிதந்தவரை தீயணைப்பு துறையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ALSO READ | கணவரை கத்தியால் குத்தி கொலை செய்தத மனைவி காவல் நிலையத்தில் சரண்

இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவு ஆலாந்துறை சித்திரைச் சாவடி பகுதியில் உள்ள தோட்டத்தில் மணி என்பவரது வீட்டிற்கு சென்ற வட மாநில இளைஞர் திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அவரை கையும் களவுமாக பிடித்த மணியின் மகன் விஸ்வநாதன் மற்றும் மருமகன் சம்பத்குமார் ஆகியோர் வடமாநில இளைஞரை கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர் ஆலாந்துறை காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு சென்ற காவல்துறையினர், மதுபோதையில் இருந்த வடமாநில இளைஞரை காலையில் காவல்நிலையத்தில் ஒப்படைக்கும்படி கூறிச்சென்றதாக கூறப்படுகிறது.

ALSO READ | ஒரகடம் அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை

ஆனால், அடுத்த நாள் காலையில் வடமாநில இளைஞர் சித்திரச்சாவடி அணையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விஸ்வநாதன், காளியப்பன், சம்பத்குமார் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் தடயங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
Source link