தமிழில் 2016-ஆண்டு வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்கிற படத்தின் மூலம் திரையுலகிற்கு இளம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன்.  இவர் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ‘நவரசா’ வெப் சீரிஸின் ஒரு பகுதியான ‘ப்ராஜெக்ட் அக்னி’ என்ற தொகுப்பை இயக்கினார்.  தற்போது நடிகர் தனுஷை வைத்து ‘மாறன்'(Maaran) என்கிற ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படத்தை இயக்கியுள்ளார்.  இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட், கிருஷ்ணகுமார், பாலசுப்ரமணியன், மகேந்திரன், அமீர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டது.  கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், ஒரு கையில் பேனாவை வைத்துக்கொண்டு மற்றொரு கையால் ஒருவரை அடிப்பது போன்று அமைந்திருந்த காட்சி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பை பெற்றது.  ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல்  ‘Disney Plus Hotstar’ OTT இயங்குதளத்தில் வரும் பிப்ரவரி மாதம் வெளியாக போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

maaran

இந்நிலையில் இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.  ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலை தனுஷ் தனது சொந்த குரலில் பாடுகிறார்.  இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார், அறிவு இப்பாடலுக்கு rap பாடியுள்ளார்.  இதனை அறிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுடன் நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.  சமீப காலங்களாக தனுஷ் நடிப்பு மட்டுமல்லாது பல படங்களில் தனது சொந்த குரலில் பாடல்கள் பாடி வரும் நிலையில் தற்போது அவர் நடிக்கும் ‘மாறன்’ படத்திற்கும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

ALSO READ | நீங்கள் எப்போதும் சாம்பியன் தான், சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR




Source link