தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற சுசி கணேசன், இந்தியில் தற்போது ‘தில் ஹே கிரே’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அடுத்ததாக மீண்டும் தமிழ் திரையுலகுக்கு திரும்பியுள்ள அவர், புதிதாக இயக்கும் படத்தின் பெயரையும் அறிவித்துள்ளார். அதன்படி, புதிய படத்துக்கு ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்று டைட்டில் வைத்துள்ளார். 

ALSO READ | ’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ சிம்புவின் புத்தாண்டு வாழ்த்து

1980-களில் மதுரையில் நடக்கும் நிஜ சம்பவங்களின் பின்னணியை கொண்ட இந்தப் படம் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகவுள்ளது. முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்படத்தின் திரைக்கதை ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுக்கவுள்ளது. ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தை சுசிகணேசனின் 4 V எண்டர்டெயின்மென்ட் நிறுவனமே பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

இந்தியில் இரண்டு படங்கள் தயாரித்துள்ள சுசிகணேசன் இந்தி தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். அதேபோல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் உறுப்பினராக அங்கம் வகிக்கிறார். இவருடைய கம்பெனியின் முதல் படைப்பாக ‘வஞ்சம் தீர்த்தாயாடா’ வெளிவரவுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றவுள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழுமையான விபரங்கள் பொங்கல் திருநாளில் அறிவிக்கப்பட உள்ளது. 

ALSO READ | ’வெந்து தணிந்தது காடு’ புத்தாண்டு பரிசாக அப்டேட் கொடுத்த கவுதம்மேனன்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR




Source link