பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஹே சினாமிகா’. பிருந்தா மாஸ்டர் இயக்கும் முதல் திரைப்படம். இப்படத்தில் துல்கர், அதிதி, காஜல் அகர்வால் ஆகியோர் லீட் ரோல்களில் நடித்துள்ளனர். லவ் சப்ஜெக்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் கூட்டாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

ALSO READ | ஜெய்ப்பூரில் மீண்டும் BEAST சூட்டிங்..! விஜய் பங்கேற்பா?

இந்நிலையில், படத்தில் துல்கர் சல்மான் அச்சமில்லை அச்சமில்லை என்ற பாடலையும் பாடியுள்ளார். மதன் கார்க்கி வரிகளில், கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை பொங்கல் விருந்தாக படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளது. படத்தை தயாரிக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பாடலின் குட்டி ஃபோர்ஷனையும் படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் துல்கர் முதன்முறையாக பாடியிருக்கும் தமிழ் பாடல் என்பதால், இந்த குட்டி போர்ஷனுக்கே இணையத்தில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. முழு பாடலையும் பார்க்க வெயிட்டிங்கில் இருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். இந்தப் பாடல் 45 நிமிடங்களில் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | திரையரங்குகளில் வெற்றிகரமான 50வது நாளில் ‘மாநாடு’!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR




Source link