‘பாகுபலி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தவர் நடிகர் பிரபாஸ்.  தனது சிறப்பான நடிப்பால் மக்கள் மத்தியில் பிரபலமானவர், இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஐவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.  தென்னிந்தியாவில் மட்டுமல்லாது இவர் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். 

தற்போது பிரபாஸ், இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ‘ராதே ஷியாம்’ எனும் படத்தில் நடித்துள்ளார்.  இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாக்யஸ்ரீ , கிருஷ்ணம் ராஜு, சத்யராஜ், ஜெகபதி பாபு, சச்சின் கெடேகர், பிரியதர்ஷி, முரளி சர்மா, குணால் ராய் கபூர், சத்யன், ஜெயராம், ஃப்ளோரா ஜேக்கப், சாஷா செத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், இத்தாலி மற்றும் ஜார்ஜியாவில் நடைபெற்றது. மேலும் இப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். 

இப்படம் 1970-களில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதியன்று இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா தொற்று காரணமாக தள்ளிப்போனது.  மேலும் ‘ராதே ஷியாம்’ படமும், ராஜமௌலி இயக்கும் ‘RRR’ படமும் ஒரே நாளில் ரிலீசாக இருந்த நிலையில் அந்த படத்தின் வெளியீடும் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இப்படத்தின் நேரடி OTT ரிலீஸ் உரிமையை ரூ.350 கோடிக்கு கேட்டு அமேசான் ப்ரைம் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது.  ஏற்கனவே நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இப்படத்தின்  OTT உரிமையை வாங்க ரூ.300 கோடி சலுகையளித்த நிலையில் அதைவிட கூடுதலாக அமேசான் ப்ரைம் நிறுவனம் சலுகை அளித்துள்ளது.  பிரபாஸின் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் காண எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் சமயத்தில், இதுபோன்ற நிகழ்வுகளால் இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகாதோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்ததுள்ளது.  இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் ‘ராதே ஷியாம்’ படத்தை திரையரங்கில் வெளியிடவே ஆர்வம் காட்டி வருவதால் பிரபாஸ் ரசிகர்கள் இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 
Source link