இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கும் ஹன்சிகா, ரசிகர்கள் விரும்பும் ஹேண்ட்ஸம் ஹீரோயினாக எப்போதும் இருக்கிறார். சிரித்த முகத்தோடு வலம் வரும் அவர், தன்னுடைய திறமையால் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மற்றவர்கள் அன்பாகவும், நேசமாகவும் இருக்க வேண்டும் என்பதை விரும்பும் ஹன்சிகா, அவரும் மற்றவர்களிடம் அப்படியே பழகுவதை பழக்கமாக வைத்திருக்கிறார். 

ALSO READ | யுவன்சங்கர் ராஜா குரலில் வெளியாகும் புதிய பாடல்! விஷால் கொடுத்த அப்டேட்

தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று பிஸியான அவர், இப்போது மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கிறார். 2022 ஆம் ஆண்டில் பழைய மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர், தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிப் படங்களிலும் பிஸியாக நடிக்க உள்ளார். இந்த முறை ரவுண்ட் கட்டி அடிக்கும் முடிவில் இருக்கும் ஹன்சிகா, 9 புரொஜெக்டுகளில் கமிட்டாகியுள்ளாராம்.

தமிழில் இயக்குநர் ராஜேஷூடன் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளார். வாலு பட இயக்குநர் விஜய் சந்துரு, இயக்குநர் ஆர். கண்ணனின் புதிய படம் ஆகியவற்றிலும் நடிக்க உள்ளார்.  படத்தில் மட்டுமல்லாமல் யூ டியூப் பிரபலமாகவும் மாறியிருக்கிறார் ஹன்சிகா. அண்மையில், அவர் வெளியிட்ட ஸ்ரீம் பாகல் ஆல்பம் ஒரே இரவில் 12 மில்லியன் வியூஸைக் கடந்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஹன்சிகா, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தியையும் அனுப்பியுள்ளார்.

ALSO READ |  இயக்குனராக மாறிய சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன்!

அதில், ” கடந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், இந்த 2022 மக்களுக்கு இருளை விலக்கி மகிழ்ச்சியைக் கொடுக்கும் என நம்புகிறேன். இந்த ஆண்டில் நான் 9 வெவ்வேறு திரைப்படங்களில் நடிக்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு உங்களின் அன்பும், ஆதரவும் தேவை.  எல்லோரும் நேர்மறையான எண்ணத்தை பரப்புவோம். முக்கியமாக, அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என நினைக்கிறேன்” என ஹன்சிகா கூறியுள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
Source link