தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவர் பல படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் இவரின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திய படம் என்றால் அது ‘மகாநதி’ தான்.  மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான அந்த படத்தில் அவரை போலவே சிறப்பாக நடித்ததால் இவருக்கு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ALSO READ | ALSO READ | கொரோனா பரவல்; தள்ளிவைக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்கள்

அதனை தொடர்ந்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களையே அதிகம் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.  பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்த இவர் சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்தே’ (Annaatthe) படத்தில் ரஜினிக்கு தங்கையாக புதிய பரிமாணத்தில் நடித்திருந்தார், இந்த படமும் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இவர் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.  ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் விஜயை பிடிக்காத கதாநாயகிகள் என்று யாருமே இருக்க முடியாது.  அவருடன் ஒரு படமாவது நடித்து விடமாட்டோமா என்று என்று பலரும் காத்து கொண்டிருந்தனர்.  இவர் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “விஜய் சாரோட மிகப்பெரிய ரசிகை நான், ‘போக்கிரி’ படத்தின் சக்ஸஸ் மீட்டுக்காக அவர் கேரளா வந்திருந்தார்.  அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் தான் நான் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்.  அங்க இருந்து அவருக்கு கை காட்டி, ரவுடி மாறி கத்தி ரகளை பண்ணிருக்கேன்.  அந்த அளவுக்கு நான் அவரோட ரசிகை” என்று கூறியுள்ளார்.

மேலும் தான் தளபதி விஜயுடன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு நாளும் அவரை ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தான் பார்க்கிறேன் என்றும் கூறியுள்ளார்.  அதுமட்டுமல்லாது விஜயின் பிறந்தநாளுக்கு இவர் தானே கைப்பட வரைந்த ஓவியம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.  கீர்த்தி சுரேஷிற்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த ஓவியத்தை நடிகர் விஜய் தனது வீட்டின் வரவேற்பு அறையில் மாட்டிவைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | மின்னல் முரளி திரைப்படத்தின் Making Video இதோ…!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR
Source link