புதுடெல்லி: தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால்.  கடந்த அக்டோபர் 30, 2020 அன்று தொழிலதிபரான கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இவர் வெப் தொடர் லைவ் டெலிகாஸ்டில் நடித்திருந்தார். அவரது நடிப்பில் ஹேய் சினாமிகா, கோஷ்டி, பாரிஸ் பாரிஸ் ஆகிய தமிழ்ப் படங்கள் வெளிவர உள்ளன.

இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக சில செய்திகள் அவ்வப்போது பரவியது. அதன் படி தற்போது பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை அவரது கணவர் கௌதம் கிட்ச்லு, சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். 

ALSO READ | ’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ சிம்புவின் புத்தாண்டு வாழ்த்து

சமூக ஊடகங்களில் பகிர்ந்த பதிவு
ஜனவரி 1 அன்று, கௌதம் கிட்ச்லு தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில்., அவரது மனைவி காஜல் அகர்வாலின் அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன், 2022 உங்களுக்காக காத்திருக்கிறது என்று எழுதினார். இதனுடன், கர்ப்பிணிப் பெண்ணின் எமோஜியையும் பகிர்ந்துள்ளார்.

 

 

தற்போது இந்தியன் 2, கருங்காப்பியம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிரஞ்சீவி, ராம் சரண் நடித்துள்ள ஆச்சார்யாவிம் காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் காஜல் அகர்வால் நாகார்ஜுனின் கோஸ்ட் படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார். அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திடீரென அவரை படத்திலிருந்து நீக்கியுள்ளதாக செய்திகள் வெளியானது. எதற்காக அவரை படத்திலிருந்து நீக்கினர் என்பது குறித்து தயாரிப்பு தரப்பு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | ’வெந்து தணிந்தது காடு’ புத்தாண்டு பரிசாக அப்டேட் கொடுத்த கவுதம்மேனன்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 
Source link