தமிழ் திரையுலகின் மாஸ் ஹீரோக்களாக கருதப்படும் விஜய் மற்றும் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  இருவரில் யார் பெரிய ஹீரோ? என்று அடிக்கடி இருதரப்பு ரசிகர்களிடையேயும் சண்டைகள் அவ்வப்போது எழுவது வழக்கமான ஒன்று.  இருவரின் படங்களுக்கும் முதல் நாள், முதல் ஷோவை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் திருவிழாவிற்கு கூடும் கூட்டத்தை போல ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதும்.

ALSO READ | கதை சொல்றதுல எஸ். ஜே. சூர்யா கிங் – விஜய்!

கடந்த ஆண்டு(2021) ஜனவரி மாதம் 13-ம் தேதியன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியானது.  இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோஹனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், சாந்தனு, நாசர், ஸ்ரீநாத், ஸ்ரீமன், சிபி ஆகியோர் நடித்திருந்தனர்.  இப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.  அனிருத் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

master

இந்நிலையில் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வலிமை’ படமும் இந்த ஆண்டு(2022) அதே ஜனவரி மாதம் 13-ம் தேதி ரிலீசாக போகிறது.  ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான இந்த படம், விஜய் படம் வெளியான அதே மாதத்தில், அதே தேதியில் வெளியாகப்போவது அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  படம் ஒரே மாதம், ஒரே நாளில் ரிலீஸாவது மட்டுமல்லாது இன்னும் சில ஒற்றுமைகளை இப்படங்கள் கொண்டுள்ளது.

அதாவது ‘மாஸ்டர்’ மற்றும் ‘வலிமை’ ஆகிய இரண்டு படங்களின் கால அளவும் சரியாக 2 மணி 58 நிமிடங்கள், அடுத்ததாக திரையரங்குகளில் 50% இருக்கை அனுமதியுடன் ‘மாஸ்டர்’ படம் ரிலீசானதை போலவே ‘வலிமை’ படமும்  திரையரங்குகளில் 50% இருக்கை அனுமதியுடன் ரிலீசாக போகிறது.  மேலும் வலிமை படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் டிசம்பர்-31ம் தேதியன்று தணிக்கை குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியதோடு, வன்முறை நிறைந்த மற்றும் ஆபாசமான காட்சிகள் சிலவற்றையும் நீக்க கோரியுள்ளது.  பொங்கல் விருந்தாக அமையப்போகும் இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

ALSO READ | பிகில்-ஐ BEAT செய்ய முடியாத வலிமை டிரெய்லர்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR
Source link