தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகராகப் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் சதீஷ்.  இவர் தற்போது நடிகர் சதீஷ் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

 கதாநாயகனாக அறிமுகமான சதீஷின் (Sathish) ‘நாய் சேகர்’ (Naai Sekar) படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அத்துடன் சென்னையில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. மேலும் இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

ALSO READ | ’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ சிம்புவின் புத்தாண்டு வாழ்த்து

இந்தப் படத்தில் பவித்ரா லட்சுமி நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தப்ப்டத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் சதீஷுடன் நடித்துள்ளது. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்டனர். 

இந்த நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சதீஷின் நாய் சேகர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயனும், கிரிகெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ALSO READ | ’வெந்து தணிந்தது காடு’ புத்தாண்டு பரிசாக அப்டேட் கொடுத்த கவுதம்மேனன்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
Source link