1) அன்பறிவு (Anbarivu) :

அஸ்வின் ராம் இயக்கத்தில், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர்  ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ் படம் “அன்பறிவு”.   இப்படத்தில் ஷிவானி ராஜசேகர், காஷ்மீரா, நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் விதார்த், தீனா, அர்ஜை, சரத் ரவி, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படம் நேரடியாக ‘Disney Plus Hotstar’  OTT இயங்குதளத்தில் வெளியாகியுள்ளது.

2) ஜெயில் (jail) : 

வசந்தபாலன் இயக்கத்தில் G.V.பிரகாஷ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘ஜெயில்’.  இப்படத்தை ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இப்படத்தில் அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, பிரபாகர், ரோபோ சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீசாக இருக்கிறது.  இப்படத்திற்கு G.V.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது.  இந்நிலையில் இந்த படம் ‘Tentkotta’ OTT இயங்குதளத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ளது. 

jail

3)  புஷ்பா(Pushpa) :

சுகுமார் இயக்கத்தில் உருவான தெலுங்கு படம் புஷ்பா(Pushpa).  இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட இருக்கிறது.  மேலும் இப்படத்திற்கு  தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது.  இந்நிலையில் இந்த படம்  ‘Amazon Prime’ OTT இயங்குதளத்தில் இன்று ரிலீசாக உள்ளது. 

4) வருது காவலேனு (VaruduKaavalenu) :

லக்ஷ்மி சௌஜன்யா இயக்கத்தில் நகைச்சுவை மற்றும் காதல் கலந்து தெலுங்கு மொழியில் வெளியான படம்  “வருது காவலேனு (VaruduKaavalenu)”.  இப்படத்தில் நாக சௌர்யா, ரிது வர்மா, முரளி சர்மா, நதியா, ஜெயபிரகாஷ், வெண்ணெலா கிஷோர், பிரவீன் ஆகியோர் நடித்துள்ளனர்.  கடந்த ஆண்டு வெளியான இந்த படம் தற்போது ‘Zee5’ OTT இயங்குதளத்தில்  இந்த வாரம் ரிலீசாக உள்ளது. 

5) லக்ஷ்யா (Lakshya) :

தீரேந்திர சந்தோஷ் ஜகர்லபுடி இயக்கத்தில் விளையாட்டை மையமாக வைத்து தெலுங்கு மொழியில் வெளியான படம் “லக்ஷ்யா (Lakshya)”.  நாக சௌர்யா, ஜெகபதி பாபு, கெட்டிகா சர்மா, சச்சின் கெடேகர், சத்யா, ரவி பிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.  கடந்த ஆண்டு வெளியான இந்த படம்தற்போது  ‘Aha’ OTT இயங்குதளத்தில்  இந்த வாரம் ரிலீசாக உள்ளது.

ALSO READ | நடிகர் விஜய்காக ரவுடி லெவெலுக்கு ரகளை செய்தேன்- கீர்த்தி சுரேஷ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR
Source link