எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், டி.வி.வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘RRR‘.  இப்படத்தில் ஜூனியர் NT ராமாராவ், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி, அலிசன் டூடி, ரே ஸ்டீவன்சன் மற்றும் ஸ்ரியா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படம் இந்திய புரட்சியாளர்களான ‘அல்லூரி சீதாராம ராஜு’ மற்றும் ‘கொமரம் பீம்’ ஆகியோரின் புரட்சி பற்றி புனையப்பட்ட திரைக்கதை.  இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா, உக்ரைன், ஹைதராபாத் போன்ற பல இடங்களில் நடத்தப்பட்டது.  

இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது.  பின்னர் இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்தது.  ஆனால் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலால் திரையரங்குகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக இப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

alia

இந்நிலையில் இப்படத்தில் நடித்த இரு பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் பலரையும் வாய் பிளக்க செய்துள்ளது.   அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பட் ஆகிய இருவரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், இவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே கண்டிப்பாக அதிருப்தியை ஏற்படுத்தாது என்றும் ஏற்கனவே படத்தின் இயக்குனர் கூறியிருந்தார்.  இவர்கள் நடித்த சில நிமிட காட்சிகளுக்கு அஜய் தேவ்கனுக்கு ரூ.35 கோடியும்,  ஆலியா பட்டிற்கு ரூ.9 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் படத்தின் முக்கிய ஹீரோக்களான ஜூனியர் NTR மற்றும் ராம்சரணுக்கு ரூ.55 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | முத்தையா முரளிதரனின் பயோபிக்கில் விஜய் சேதுபதிக்கு பதிலாக இவரா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
Source link