பாகுபலி இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர் (RRR). ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த திரைப்படம் சுமார் 400 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன.

ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

சென்னையிலும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் தமிழ் பிரபலங்களான சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த படம் இப்போது திட்டமிட்டப்படி ரிலீஸ் ஆகுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே நான்கு முறை அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படத்தின் ரிலீஸூக்கு ஒமிக்ரான் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் கூடுவதை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வசூல் பாதிக்கும் என படக்குழு கருதுகிறது. இதனால், கோடை விருந்தாக திரைக்கு கொண்டு வருவது குறித்தும் படக்குழு ஆலோசனை நடத்தி வருகிறதாம். அதேநேரத்தில், படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படால் பட்ஜெட் மேலும் எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு காரணிகள் ஆராய வேண்டியிருப்பதால், அவற்றை கருத்தில் கொண்டு படக்குழு ரிலீஸ் தேதி குறித்து விரைவில் புதிய அப்டேட்டை கொடுக்க உள்ளனர்.

ALSO READ | RRR vs Valimai: படத்தின் நீளத்திலேயே தொடங்கிருச்சு Fight!  3 மணி நேர விருந்துக்கு தயாராகுங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
Source link