2000-களில் வெற்றி இயக்குனர்களின் பட்டியலில் முன்னணி வகித்தவர் எஸ். ஜே. சூர்யா.  தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் மற்றும் அஜித் இருவரையும் வைத்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர்.  நடிகர் விஜயை வைத்து இயக்கிய ‘குஷி’ படமும், அஜித்தை வைத்து இயக்கிய ‘வாலி’ படமும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்காதொரு இடத்தை பிடித்துள்ளது.  அந்த சமயத்தில் இவர் இயக்கும் படங்களில் நடிக்க பலரும் போட்டிபோட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | தளபதி விஜயின் ’Beast’ வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

இயக்குனரான இவர் கதாநாயகனாக பல படங்களில் புதிய அவதாரமெடுத்தார்.  ‘நியூ’, ‘அன்பே ஆருயிரே’ படங்களில் இவரே கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் தன் பன்முகத்திறமையினை திரையுலகிற்கு வெளிக்காட்டினார்.  தற்போது படங்களை இயக்குவதை காட்டிலும் இவர் அதிகமாக நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தி வருகிறார்.   கதாநாயகனாக நடித்த இவர் தற்போது வில்லனாகவும் நடிப்பில் அசத்தி வருகிறார்.  ஸ்பைடர், மெர்சல், மாநாடு போன்ற படங்களில் இவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரம் மேலும் இவரை புகழ் உச்சிக்கு கொண்டு செல்ல வழிவகுத்தது.  இந்நிலையில் நடிகர் விஜய் ஏற்கனவே இவரை பற்றி புகழ்ந்த செய்தி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

vijay

அவர் கூறியதாவது, சினிமாவில் வெற்றி, தோல்விகள் வருவதெல்லாம் சகஜம், என்னுடைய கேரியரில் முக்கியமான நேரத்தில் முக்கியமானபடமென்றால் அது குஷி தான்.  Do or Die சிட்சுவேஷன்.  அந்த நேரத்துல குஷி படம் மூலம் என்னை உயர்த்தியவர்  எஸ். ஜே. சூர்யா.  இந்த படம் ரிலீசானது விக்ரமன் சார் என்கிட்ட வந்து எப்படி விஜய் இந்த படத்த செலக்ட் பண்ணீங்க ? இதுல அப்டி என்ன கதை இருக்குனு கேட்டார்? .  அதற்கு நான் கரெக்ட் தான் சார் எஸ். ஜே. சூர்யா..எஸ். ஜே. சூர்யானு ஒருத்தர் இருக்காரு, அவர் கதை சொல்லி நீங்க கேக்கணும் சார், கதை சொல்றதுல அவர்தான் கிங்கு அவர் சொன்னதுல நான் மெஸிமரைஸ் ஆயிட்டேன் சார்னு சொன்னேன்” என்று நடிகர் விஜய் எஸ். ஜே. சூர்யா குறித்து பெருமையாக பேசியுள்ளார்.

ALSO READ | RRR ரிலீஸ் ஒத்திவைப்பு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR
Source link