உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 (Bigboss5) நிகழ்ச்சி 68 நாட்களை எட்டியுள்ளது. ஏறத்தாழ இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பிரியங்கா, ராஜூ, தாமரை, சிபி, பாவனி, நிரூப், சஞ்சீவ், மற்றும் அமீர் உள்ளிட்ட போட்டியாளர்கள் இருக்கின்றனர். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டிருக்கும் பிக்பாஸின் பிரதான டேக் ’எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பது தான். 

 

100 நாள் பிக்பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் எல்லா சவால்களையும் சந்தித்து வெற்றிபெறுபவர் யார் என்பது தெரியவில்லை. தற்போது நிகழ்ச்சி 90 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, மேலும் வாரா வாரம் ஒருவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்.

Also Read | கொரோனா விதிகளை மீறி பிக்பாஸ் : கமலுக்கு நோட்டீஸ்

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வருண் மற்றும் அக்ஷரா இருவரும் டபுள் எவிக்ஷன் என்ற முறையில் வெளியேற்றப்பட்டனர். இந்த டபுள் எவிக்ஷன் ரசிகர்கள் அனைவரையுமே மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

தற்போது இந்த வாரமும் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசி மூன்று வாரம் என்பதினால், வீட்டிலுள்ள அணைத்து போட்டியாளர்களும் நாமினேட் செய்யப்பட்டனர். அதன்படி இந்த நிகழ்ச்சியில்  டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் நன்கு விளையாடி அமீர் டிக்கெட்டை வென்று விட்டார் எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டார்.

இந்த நிலையில், இந்த வாரம் சிபி மற்றும் சஞ்சீவ் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போகிறார்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Also Read | கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்க மாட்டோம்: தமிழக சுகாதாரத் துறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR
Source link