நடிகர் சூர்யா – பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கலையொட்டி புதிய 2 அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் அப்டேட், புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. புதிய போஸ்டரில் சூர்யா, நகரத்து காஸ்டியூமில் ஜம்முனு இருக்கிறார்.

ALSO READ | சூர்யாவின் செம குத்து…! எதற்கும் துணிந்தவனின் ’முதல் சிங்கிள்’ நாளை

மற்றொரு அப்டேட், இந்தப் படத்தில் சூர்யாவுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். ’சுர்ருனு’ எனத் தொடங்கும் அந்தப் பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இமான் இசையில், அர்மான் மாலிக் மற்றும் நிகிதா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர். அண்மையில் வெளியான ‘உள்ளம் உருகுதய்யா’ பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில், பொங்கல் விருந்தாக இந்தப் பாடலை எதற்கும் துணிந்தவன் டீம் வெளியிடுகிறது.

படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் சத்தியராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, சுப்பு பஞ்சு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ALSO READ | மாஸ் காட்டும் சூர்யா..! 5 மொழிகளில் வெளியாகும் ’எதற்கும் துணிந்தவன்’

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
Source link