நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அதிகராப்பூர்வமாக 3வது அலை உருவாகிவிட்டதாக அறிவித்து கடுமையான கட்டுப்பாடுகளையும் அறிவித்துவிட்டன. இதேபோல், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

ALSO READ | கொரோனா பரவல்; தள்ளிவைக்கப்பட்ட மெகா பட்ஜெட் படங்கள்

குறிப்பாக, தியேட்டர்களில் 50 விழுக்காடுக்கும் மேல் பார்வையாளர்களை அனுமதிக்ககூடாது என தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் அளிவித்துள்ளன. இதனால், பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருந்த மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் வசூலை கருத்தில் கொண்டு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ராஜமௌலியின் இயக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜனவரி 7 ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. இதனையொட்டி பல கோடி ரூபாய் செலவு செய்து படக்குழு இந்தியா முழுவதும் புரோமோஷன் பணிகளை செய்து வந்தது. திடீரென கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கபட்டதால், பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

இதேபோல், மிகப்பெரிய பட்ஜெட் படங்களான ராதே ஷ்யாம், அக்ஷயக்குமாரின் ப்ருத்திவிராஜ், ஷாகித் கபூரின் ஜெர்சி ஆகிய படங்கள் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், வலிமை திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர் போனிக்கபூர் டிவிட்டரில் அறிவித்திருந்தார். இதனால், ரசிகர்களும் பொங்கலை வலிமை பொங்கலாக கொண்டாட காத்திருந்தனர். இந்நிலையில், படத்தின் வெளியீடு ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு, வலிமை படம் சரியான நேரத்தில் ரிலீஸாகும் என்றும், அதுவரை மக்கள் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. 

ALSO READ | மின்னல் முரளி திரைப்படத்தின் Making Video இதோ…!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR




Source link